புயல் சீற்றம் – தாய்லாந்தில் விமானங்கள் ரத்து


தாய்லாந்தின் தெற்கு பகுதியில் புயல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

 

இதனால் எல்லா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் நகோன் சி தாமராத் மாகாணத்தில் 80 ஆயிரம் மக்களை வெளியேற்ற அவசர நடவடிக்கைகள் தொடங்கப் பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

 

தாய்லாந்தின் தெற்கு கடல்பகுதியில் நிலைகொண்டுள்ள பபுக் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், 75 கி.மீ  முதல் 95 கி.மீ. வேகத்துடன் வெள்ளிக்கிழமை மதியம் கரையைக் கடக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

இதனால், அதிக மழைப்பொழிவ ஏற்பட்டு தெற்கு தாய்லாந்து கடற்கரையோரப் பகுதிகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே, இதுவரை 8 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சாமுய், தாவோ மற்றும் பாங்கான் ஆகிய தீவுகளுக்கு கப்பல் மற்றும் படகுப் போக்குவரத்தும் ரத்துசெய்யப்பட்டுள்ளது. மீன்பிடிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 

Add new comment

5 + 9 =