புனித ஆஸ்கார் ரோமேரோவை கொன்றவருக்கு தண்டனை வழங்க கோரிக்கை


புனித பேராயர் ஆஸ்கார் ரோமேரோவை கொன்றவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்க வேண்டும் என்று சான் எல் சால்வடோர் உயர் மறைமாவட்ட மனித உரிமை அலுவலகம் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.

 

இதுவரை இதனை செய்யாமல் விடுவதற்கு வழங்கிய ‘படைப்பாற்றல் மிக்க சாக்குப்போக்குகளுக்கு’ முடிவு காண வேண்டும் என்று இது தெரிவித்திருக்கிறது.

 

அப்போதைய பேராயர் ஆஸ்கார் ரோமேரோ திருப்பலி நிறைவேற்றி கொண்டிருந்தபோது படுகொலை செய்ததால் 1980ம் ஆண்டு முன்னாள் ராணுவ தளபதி அல்வாரோ ஃராபேல் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

 

புனித ஆஸ்கார் ரோமேரா படுகொலை செய்ததற்கு 38 ஆண்டுகளுக்கு மேலாகியும் நீதி கிடைக்காமல் உள்ளதை இந்த உயர் மறைமாவட்டத்தின் மனித உரிமை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

பேராயர் ஆஸ்கார் ரோமேரா புனிதராக உயர்த்தப்பட்டவுடன், இந்த முன்னாள் தளபதி அல்வாரோ ஃரபேலை கைது செய்ய எல் சால்வடோர் நீதிபதி ஒருவர் உத்திரவிட்டார்.

 

ஆனால், இதுவரை அந்த நபர் நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

Add new comment

2 + 9 =