புனித அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்


நோபல் பரிசு பெற்ற புனித அன்னை தெரசாவின் சுயசரிதையை திரைப்படமாக்குவது அதிகாரபூாவமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்திய மற்றும் சர்வதேச நடிகர்களால் நடிக்கப்படும் இந்த திரைப்படம், சீமா உபாதேயே என்பவரால் எழுதி இயக்கப்படுகிறது.

 

இந்த திரைப்படம் பிரதீப் ஷர்மா, நிதின் மன்மோகன், கிரி்ஷ் ஜோஹர் மற்றும் பிராச்சி மன்மோகனால் தயாரிக்கப்படுகிறது

 

இந்த திரைப்படத்தை தயாரிப்போர் மிஷனரிஸ் ஆப் சேரிட்டி துறவற சபையின் தற்போதைய தலைமை அருட்சகோதரி பிரேமா மேரி பெரிக்கையும். அருட்சகோதரி லெனியையும் கொல்கத்தாவில் சந்தித்து ஆசீர்வாதங்களை பெற்றுள்ளனர்.

 

அல்பேனியாவில் இருந்து 1929ம் தேதி இந்தியா வந்த அன்னை தெரசா, 1948ம் ஆண்டு மிஷனரிஸ் ஆப் சேரிட்டி என்கிற துறவற சபையை கெல்கத்தாவில் நிறுவினார்.

 

அன்னை தெரசாவின் அரும் பணிகளை பாரா்டி இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரெத்னா விருதை அவருக்கு வழங்கி இந்திய அரசு கௌரவித்துள்ளது.  

Add new comment

4 + 9 =