புத்தாண்டு தினத்தில் அதிக குழந்தைகள் பிறப்பில் இந்தியா முதலிடம்


புத்தாண்டில் அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளதில் 2019-ம் ஆண்டும் இந்தியாவே முதலிடம் பெற்றுள்ளது.

 

புத்தாண்டு நாளான்று இந்தியாவில் 69 ஆயிரத்து 945 குழந்தைகள் பிறந்துள்ளதாக ஐநாவின் குழந்தைகளுக்கான நல அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது

 

கடந்த ஆண்டு புத்தாண்டு நாளிலும் அதிகமான குழந்தைகள் பிறந்த நாடுகளில் இந்தியாவே முதலிடம் பெற்றிருந்தது.

 

'2019-ம் ஆண்டு பிறந்தவுடன் உலக அளவில் 3 லட்சத்து 95 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 

இந்தியாவில் அதிகபட்சமாக 69 ஆயிரத்து 944 குழந்தைகள் பிறந்துள்ளன.

 

சீனாவில் 44 ஆயிரத்து 940 குழந்தைகளும், நைஜீரியாவில் 25ஆயிரத்து 685 குழந்தைகளும் பிறந்துள்ளன.

Add new comment

9 + 2 =