பிளாஸ்டிக் இல்லாமல் இயற்கை நாப்கின் – மாணவி சாதனை


பிளாஸ்டிக் எதுவும் இல்லாமலேயே இயற்கையான முறையில் மஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மற்றும் எலுமிச்சை மூலம் நாப்கினை உருவாக்கி மாணவி ஒருவர் சாதித்துள்ளார்.

 

அண்ணா பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட மாணவியான ப்ரீத்தி ராமதாஸ் உருவாக்கியுள்ள இந்த நாப்கின்கள் ஒரு மாதத்துக்குள் மட்கக்கூடியவை.

 

செல்லுலோஸை அடிப்படையாகக் கொண்ட இந்த நாப்கின்கள். மஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றின் சாறுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டதால், பெண்களுக்கு பாக்டீரியா நோய்த்தொற்றை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளுக்கு எதிராக செயல்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

மிகவும் மெலிதாக3 மி.மீ. தடிமன் கொண்டதாக இருக்கும் இந்த நாப்கின், அதன் எடையைக் காட்டிலும் 1,700% அதிக நீரை உறிஞ்சும் ஆற்றலுடையது.

 

தாவரங்களின் மூலம் கிடைக்கும் பாலிமர்கள் மற்றும் கார்போஹைட்ரேட்கள் இந்த நாப்கினில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 

கடைகளில் கிடைக்கும் நாப்கின்களிலும் டயாப்பர்களிலும் பிளாஸ்டிக் கலந்திருக்கும். எனவே மட்குவதற்கு அதிக காலம் எடுக்கும்.

 

காகித எச்சத்தில் இருந்து உருவாக்கப்படும் செல்லுலோஸ் கூழ் அதில் இருக்கும். அவற்றை வெள்ளையாக்க குளோரின் பயன்படுத்தப்படுவதால் அவை நச்சுகளை வெளியிடுபவை.

 

ஹைட்ரோபோபிக் தாளால் சுற்றப்பட்டிருப்பதால் உடல் அரிப்புகள் ஏற்படலாம்.

Add new comment

6 + 5 =