பிலீப்பின்ஸ் பெயரை மாற்றும் கருத்தை நகைத்து புறக்கணிக்கும் ஆயர்கள்


பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடேர்டெ வெளிப்படுத்தியுள்ள நாட்டின் பெயரை மாற்றுகின்ற முன்மொழிவை அந்நாட்டின் கத்தோலிக்க ஆயர்கள் எள்ளிநகையாடி புறக்கணித்துள்ளனர்.

 

பிலிப்பீன்ஸின் பெயரை “உன்னதம்” என்று பொருள்படும் வகையில் “மகார்லிக்கா” என்று மாற்றுகின்ற முன்மொழிவை அதிபர் டுடெர்டே தெரிவித்திருக்கிறார்.

 

2021ம் ஆண்டு கிறிஸ்தவம் இந்த மண்ணில் வேரூன்றிய 500வது ஆண்டை கொண்டாட இருக்கின்ற வேளையில், இந்த முன்மொழிவு பேரழிவு மிக்கது என்று சோர்கோகோன் மறைமாவட்ட ஆயர் அர்டுரோ பாஸ்டஸ் தெரிவித்துள்ளார்.

 

இந்த நட்டின் வரலாறு 1521ம் ஆண்டு கிறிஸ்தவம் இங்கு வந்தடைந்ததோடு தொடர்புடையதாகும்.

 

புதிய நாடுகளை ஆய்வு செய்து கண்டறிபவர் பெர்டினான்ட் மகெல்லன் கிறிஸ்து அரசரின் மணிமுடியின் கீழும், ஸ்பெயின் நாட்டு மன்னர் இரண்டாம் பிலிப்பு-வின் மணிமுடியின் கீழும் பிலிப்பீன்ஸை ஒப்படைத்தார் என்ற ஆயர் பாஸ்டஸ் கூறியுள்ளார்.

 

ஸ்பெயினின் காலனி நாடாக பிலிப்பீன்ஸ் இருந்த 16வது நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டு மன்னரால் பெயரிடப்பட்டது.

 

பல தீவுக் கூட்டங்களை ஒரே நாடாக கொண்டு வந்த அந்த முயற்சி வரலாற்று மு்ககியத்துவம் வாய்ந்த செயல்பாடு என்று இந்த ஆயர் கூறியுள்ளார்.

 

கருத்து கூறுவதற்கு மதிப்பில்லாத வயதான ஒருவரின் கூற்று என்று இந்த முன்மொழிவு பற்றி மணிலாவின் துணை ஆயர் புரோடெரின் பாபிலோ தெரிவித்துள்ளார்.

 

நாட்டிலுள்ள பல பிரச்சனைகளை கருத்தில் கொண்டு அதிபர் அவற்றை கவனத்தில் கொண்டு தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று அவர் அறிவுரை கூறியுள்ளார்.

Add new comment

11 + 1 =