பிலிப்பீன்ஸ் மக்களின் மத ஒழுங்கு கடைபிடிப்பதை உருமாற்றும் புதிய வாழ்க்கைப்பாணி


சாம்பல் புதனோடு தொடங்கியுள்ள 40 நாட்கள் நீடிக்கும் தவக்கால ஒழுங்குகளை கடைபிப்பதில், கிறிஸ்தவ மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிலிப்பீன்ஸ் நாட்டிலுள்ள வாழ்க்கை வழக்கமாக பாரம்பரிய முறைக்கு திரும்புவதுதான் வாடிக்கை.

 

ஆனால், மாகாணங்களில் இருந்து நகரங்களுக்கு குடியேறியுள்ள பிலிப்பீன்ஸ் இளைஞர்கள், முன்தைய எளிதான வாழ்க்கையை போல அல்லாமல், இப்போது பெரிதும் மாறுபட்ட வாழ்க்கை வாழ்வது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.  

 

முன்பு, தவக்கால வெள்ளிக்கிழமைகளில் எளிதான உணவுதான் பரிமாறப்படும் என்பதை அவர்கள் இப்போது எண்ணி பார்க்கிறார்கள்.

 

குழந்தைகள் சத்தம் எழுப்பக்கூடாது, இசையும் கூடாது என்று பாட்டி, தாத்தா வீட்டை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பர்.

 

வகுப்பு தோழர், தோழிகளோடு நேரம் செலவழித்து விளையாடுவதற்கு பதிலான புத்தகங்களை வாசிக்க வேண்டுமென பாட்டி சொல்லிக் கொண்டிரு்பபார்கள்.

 

ஒவ்வொரு நாளும் குழந்தைகள் திருப்பலியில் பங்கெடுக்க வேண்டும். நமது வாழ்க்கை பற்றி சிந்திக்க வேண்டிய தருணமிது என்று அனைவரிடமும் சொல்லப்படுவதுண்டு என்று பிலிப்பின்ஸ் இளைஞர்கள் எண்ணி பார்க்கின்றனர்.

 

மாலையில் செபம் செய்வது கட்டாம். சாம்பல் புதனன்று திருப்பலிக்கு சென்று அனைவரும் நெற்றியில் சாம்பல் குறியிட்டு அழிந்து போகும் வாழ்க்கையை பொருள்ளதாக வாழ சிந்திப்பதுண்டு.

 

ஆனால், இப்போது, புனித வாரத்திற்கு மட்டும்தான் கிராமத்திற்கே இளைஞர்கள் செல்கிறார்கள்.

 

ஒரு வாரமே இருக்கும் இந்நேரத்தில், உண்ணாநோன்பும் முன்பு போன்று இருப்பதில்லை என்று பல இளைஞர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

 

நகரத்திலுள்ள அவசரமான வாழ்க்கை, இளம் பருவத்தில் கடைபித்த கிறிஸ்தவ ஒழுங்குகளையே மறக்கடிக்க செய்துள்ளது.

 

சாம்பல் புதனன்று திருப்ப்லிக்கு சென்று நெற்றியில் சாம்பல் பூசிக்கொண்டாலும், இறைச்சி இல்லாத உணவாக எதை சமைத்து உண்பது என்பதை திட்டமிட கூட நேரமில்லாதவர்களாக அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

 

தவக்காலங்களில் புகைக்கின்ற சிக்ரெட்டுகளை குறைவாக புகைக்க உறுதிமொழி எடுத்து கொள்வதே ஒறுத்தல் மற்றும் தியாகங்கள் மாறியுள்ளன.

 

இவர்களின் கிறிஸ்தவ வாழ்க்கை ஒழுங்குகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டுமென பரவலாக உணரப்பட்டுள்ளது.

Add new comment

10 + 4 =