பிலிப்பீன்ஸ் அதிபருக்கு குறைவாக மதிப்பிடு்ம் திருச்சபை தலைவர்கள்


பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே தனது 3வது ஆண்டு பதவி காலத்தை தொடங்கியுள்ள நிலையில், கத்தோலிக்க திருச்சபை தலைவர்களும், பல்வேறு செயற்பாட்டாளர் குழுக்ளும் அதிபரின் செயல்பாடுகளை கண்டித்துள்ளன.

 

அதிபரின் மனித உரிமை தொடாபான செயல்பாடுகளே அதிக கண்டனத்தை பெறுகின்றன.

 

கடந்த ஜூலை 23ம் தேதி நாட்டுக்கு ஆற்றிய உரையில், தனது கவலை மனித உரிமை அல்ல மாறாக, மக்களின் வாழ்க்கை என்று அரசின் போதை மருந்து ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிரான விமர்சகர்களிடம் அதிபர் டுடெர்டே தெரிவித்திருந்தார்.

 

48 நிமிடங்கள் அவர் ஆற்றிய உரையில், இளைஞர்களின் வாழ்க்கை வீணடிக்கப்படுகிறது. இது எல்லாம் போதைப் பொருட்களால் நிகழ்வதாக குறிப்பிட்டார்.

 

ஆனால், அதிபர் டுடெர்டேயின் கூற்றுக்கள் அனைத்தையும் காலூக்கான் மறைமாவட்ட ஆயர் பாப்லோ விர்கிலியோ டேவிட ஏற்றுக்கொள்வதாக இல்லை.

 

இந்த மறைமாவட்டத்தில்தான் போதை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் பெரும்பான்மையான நபர்கள் நீதிக்கு புறம்பான முறைகளில் கொல்லப்பட்டுள்ளனர்.

 

அதிபர் இத்தகைய கூற்றுக்களை பேசிய சில மணிநேரங்களில் போதை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டோர் யாரும் மனிதர்கள் இல்லை என்று அதிபரின் கருத்துக்கள் குறிப்பிடுவதாக இந்த ஆயர் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

 

மிகவும் அடிப்படையான வாழ்வுரிமைக்கான உரிமையல்லவா இது என்று பிலிப்பின்ஸ் ஆயர்கள் பேரவையின் துணைத்தலைவரான ஆயர் பாப்லோ விர்கிலியோ கேள்வி எழுப்பியிருந்தார்.

 

அதிபரின் கூற்றுக்கள் அறிவுபூர்வமாக இல்லாததால், இந்த பார்வையை கத்தோலிக்க திருச்சபை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Add new comment

11 + 4 =