பிலிப்பீன்ஸூக்கு வரும் புனிதரின் இன்னொரு திருப்பண்டம்


இதய மாதமான பிப்ரவரியில் ஒரு புனிதரின் இன்னொரு திருப்பண்டம் பிலிப்பீன்ஸூக்கு வரவுள்ளது.

 

நோயாயிகள், மருத்துவர்கள், செவிலித்தாய்மார்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பாதுகாவலரான புனித கம்மில்லஸ் டி லில்லிஸின் இதய திருப்பண்டம் பிப்ரவரி 2ம் தேதி பிலிப்பீன்ஸீக்கு வந்து மார்ச் மாதம் முடியும் வரை அங்கு இருக்கும்.

 

இந்த இதய திருப்பண்டம் பிலிப்பீன்ஸூக்கு வருவது கடவுளிடம் இருந்து இரக்கமாகும் என்று ஆயர்கள் பேரவையின் சுகாதார பணிக்குழுவின் பாப்பிறை உறுப்பினரான ஆயர் ஆஸ்கார் புளோரன்சியோ கூறியுள்ளார்.

 

கடந்த அக்டோபர் மாதம்தான் இத்தாலிய புனிதரான பெட்டீரியானா புனித பாட்ரி பியோவின் இதய திருப்பண்டத்தை ஆயிரக்கணக்கான பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கர்கள் வரவேற்றனர்.

 

புனித கம்மிலஸின் திருப்பண்டம் செல்வதற்கு பல இடங்களில் இருந்து வேண்டுகோள்கள் வைக்கப்படுகின்றன. ஆனால், கடவுளின் இரக்கம் நமக்கு இந்த வாய்ப்பை வழங்குகிறது என்று ஆயர் புளோரன்சியோ கூறியுள்ளார்.

 

இந்த திருப்பண்டத்தின் வருகை, எல்லா மக்களுக்கும் குறிப்பாக, வறுமையால் உரிய சிகிச்சை பெற முடியாமல் இருக்கின்ற நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.  

Add new comment

9 + 6 =