பிலிப்பீன்ஸில் மோதல் அதிகரிக்குமென திருச்சபை அச்சம்


பிலிப்பீன்ஸில் மோதல் அதிகரிக்கும் என்று திருச்சபை அச்சம் கொண்டுள்ளது.

 

அரசுக்கும், கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை முடங்கியுள்ளதால் இந்த அச்சம் உருவாகியுள்ளது.

 

மோதல் அதிகரித்தால், வன்முறை, மனித உரிமை மீறல்களும் அதிகரிக்கும் என்று திருச்சபைகளின் பல்சமய குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

கம்யூனிஸ்ட்களால் ஆன புதிய மக்கள் படையை அழித்துவிட அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே கடந்த மாதம் ராணுவத்திற்கு கட்டளையிட்டுள்ளதை அடுத்து இந்த குழு கவலை வெளியிட்டுள்ளது

 

கொள்கை அடிப்படையிலான உரையாடல் தேவை என்று நாட்டின் 5 முக்கிய திருச்சபைகளை உள்ளடக்கிய இந்த பல்சமய குழுவின் தலைவர்கள் கோரியுள்ளனர்.

Add new comment

4 + 0 =