பிலிப்பீன்ஸில் அருட்தந்தையருக்கு கொலை மிரட்டல்


பிலிப்பீன்ஸ் அரசு மேற்கொண்டு வரும் போதைப்பொருள் தொடர்புடைய கொலைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்ற 3 அருட்தந்தையர் சமீபத்தில் தாங்கள் கொலை மிரட்டல்களை எதிர்கொண்டுள்ளதாக கூறியுள்ளனர்.

 

இயேசு சபை அருட்தந்தை அல்பர்டோ அஜேயோ, டிவையின் வேடு மிசனரி அருட்தந்தை ஃபிளாவியே விலானுவா மற்றும் மறைமாவட்ட அருட்தந்தை ரார்பர்ட் ரெயஸ் தங்கள் வாழ்க்கைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலை செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளனர்.

 

நாங்கள் பாதுகாப்பாக இல்லை என்று மனித உரிமை பிரச்சனைகளுக்கு கவன ஈர்ப்பு எற்படுத்துவதற்கான தொலைதூர மாரத்தான் ஓடுகின்ற அருட்தந்தை ரெய்ஸ் கூறியுள்ளார்.

 

நாங்கள் அச்சமடைந்துள்ளோம் என்று கூறும் அருட்தந்தை அலெஜோ, எச்சரிக்கை எதும் இல்லாமல் கொல்லப்படும் ஆயிரக்கணக்கான பிறரைவிட மிரட்டல்கள் பெறுவதால் நாங்கள் அதிஷ்டசாலிகள் என்று தெரிவித்துள்ளார்.

 

பிலிப்பீன்ஸ் அதிபர் பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்றுள்ள ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 841 போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் ஐந்தாயிரத்து 176 கொலைகளை அரசு எற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஆனால், 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட கொலைகள் நிகழ்ந்துள்ளதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Add new comment

6 + 7 =