பிலிப்பீன்ஸின் கத்தோலிக்க தேவாலயத்தில் குணடுவெடிப்பு


பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியிலுள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

 

பல டஜன் மக்கள் காயமடைந்துள்ளதாக அப்பகுதி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் தீவிரமாக உள்ள ஜோலோ தீவில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற திருப்பலியின்போது முதல் வெடிப்பு நிகழ்ந்தது.

 

அதனை தொடர்ந்து வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஒரு கருவி தொலை கட்டுப்பாடு மூலம் வெடிக்க செய்யப்பட்டுள்ளது.

 

இந்த பகுதியில் அமைந்துள்ள பெரும்பான்மையான முஸ்லிம் பகுதிக்கு தன்னாட்சி வழங்க கோரி நடந்த கருத்தறியும் வாக்களிப்புக்கு பிறகு இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.

 

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்த தனிநபரோ, குழுவோ பொறுப்பேற்கவில்லை.

 

இந்த தேவாலயத்தில் நடந்த முதல் குண்டு வெடிப்பு உள்ளூர் நேரப்படி காலை 8:45 மணிக்கு நிகழ்ந்ததாக அப்பகுதிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Add new comment

18 + 0 =