பிறருக்கு கொடுக்க முடியாதவர்கள் செல்வத்திற்கு அடிமைகள் – திருத்தந்தை


வாழ்க்கை அன்பு செய்து வாழ்வதற்கு, உடமைகளை பெருக்கி கொள்வதற்கு அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

 

அடுத்தவருக்கு அன்போடு உதவ பயன்படுத்தி கொள்ளவும், மனித மாண்பை வளர்ப்பதுமே செல்வத்தின் உண்மையான பொருளும், நோக்கமும் ஆகும் என்று திருத்தந்தை பிரன்சிஸ் கூறியுள்ளார்.

 

அனைவருக்கும் அடிப்படை தேவைகளை வழங்கும் வகையில் உலகம் வளமிக்கதாகவே உள்ளது என்ற கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், ஆனால், இந்த வளங்களை பகுத்தறிவு இல்லாமல் பயன்படுத்தி திரித்து விட்டனர். ஆனால், ஒரேயொரு உலகமும், ஒரேயொரு மனிதகுலமும்தான் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

 

உலகின் வளங்கள் அனைத்தும் சிலரிடம் குவிந்து கிடக்க, வறுமையில் உழல்வோர் பலராக உள்ளனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

 

களவு செய்யாதே என்கிற கடவுளின் கட்டளை அடுத்தவரின் உடமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற கருத்தை பிரதிபலிப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் அறிவுறுத்தியுள்ளார்.

Add new comment

12 + 1 =