பிறருக்கு உதவுவதால் உலகை மாற்ற முடியும் – திருத்தந்தை


பிறருக்கு உதவுவதன் மூலம் மாற்றத்தை உலகில் உருவாக்க முடியும் என்று இளைஞர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

 

உலகிலுள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு அளித்துள்ள காணொளி செ்யதியில் திருத்தந்தை பிரான்சிஸ் இந்த கருத்தை வழங்கியுள்ளார்.

 

துன்புறுகின்ற இளம் இறை நம்பிக்கையாளர்களுக்கும், இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் இளைஞர்களும், இளம் பெண்களும் உதவுவதன் மூலம் உலகில் மாற்றத்தை உருவாக்கும் வலிமையை கண்டறியலாம் என்று பனாமாவில் நடைபெறும் உலக இளைஞர்கள் தினத்திற்கு அளித்த காணொளி செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

 

“இவ்வாறு பிறருக்கு உதவி செய்வது உலகில் செயல்பட்டு வரும் பெரிய வலிமையான சக்திகளையே தலைகீழாக மாற்றிவிடும் வலிமை வாய்ந்த புரட்சி” என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

 

நவம்பர் 21ம் தேதி இந்த காணெளியை வத்திக்கான் வெளியிட்டுள்ளது.

 

“உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்” என்ற தலைப்பில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 22 முதல் 27ம் தேதி வரை உலக இளைஞர்கள் தின கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.

Add new comment

4 + 1 =