பிரேசிலில் காடுகள் அழிப்பு அதிகரிப்பு


கடந்த ஓராண்டு 7 ஆயிரத்து 900 சதுர கிலோமீட்டர் பரப்பளவு காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தொடக்க ஆய்வில்,  கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் முதல் ஜூலை 2018 ஆம் ஆண்டுவரை சுமார் 7 ஆயிரத்து 900 ஏக்கர் சதுரபரப்பளவுக் கொண்ட காடுகள் அழிக்கப்பட்டுள்ளது தெரிவ வந்துள்ளது.

 

இதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது இந்த அழிவு சதவீதம் 10 சதவீதத்துக்கு மேலாக அதிகரித்துள்ளதும் தெரிய வருகிறது.

 

சுமார் 9 லட்சம் கால்பந்தாட்ட மைதானங்களுக்கு சமமான காட்டுப்பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளன.

 

இதன் காரணமாகதான் பிரேசிலில் பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக நம்பப்படுகிறது.

 

அமேசான் பகுதிகளில் காடுகளை அழிக்கப்பட்டு வருவதாலும், சர்வதேச அளவில் புவியின் வெப்பம் உயர்ந்து வருவதாலும், மழைக்காடுகள் இருக்கும் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்துவிட்டதாக கருதப்படுகிறது.

 

அமேசான் பகுதியில் காற்றிலேயே சாரல் போல மழைத்துளிகள் அடர்த்தியாக  விழுவது இப்போது காண முடிவதில்லை என்று  தெரிவிக்கப்படுகிறது.

Add new comment

14 + 0 =