பிரேசிலில் அணை உடைந்து 40 பேர் பலி


பிரேசிலில் அணை உடைந்ததால் இதுவரை 40 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

 

காணாமல்போன 300 பேரை தேடும் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. .

 

பிரேசிலிலுள்ள மினாஸ் கெராய்ஸ் மாகாணத்தில் புருமாடின்கோ நகரம் அருகே, ‘வாலே’ என்ற நிறுவனத்துக்கு சொந்தமான இரும்புதாது சுரங்கம் உள்ளது.

 

இங்கு இருந்த நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத அணையில் சேறும், சகதியும் தேங்கியிருந்ததில், இரும்புத் தாது சுரங்கத்தின் கழிவு நீரும் தேக்கப்பட்டிருந்திருக்கிறது.

 

சனிக்கிழமை சுரங்க பகுதியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது பழைய அணையில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால், சகதி வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியுள்ளது.

 

வேலை பார்த்து வந்த 300-க்கும் மேற்பட்டோர் சேற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மாயமான 300 பேரை, ஹெலிகாப்டர்கள் மூலம் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

சேற்றில் புதைந்தவர்கள் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

 

அணை உடைப்பால் ஏற்பட்ட சேதங்களை, பிரேசில் அதிபர் சயீர் போல்சனாரூ நேரில் பார்வையிட்டுள்ளார்.

 

இதே போல "வேல்' நிறுவனத்துக்குச் சொந்தமான மற்றொரு சுரங்கத்துக்கு அருகே, கடந்த 2015-ஆம் ஏற்பட்ட அணை உடைப்பில் 19 பேர் உயிரிழந்தனர்.

Add new comment

2 + 0 =