பிரெக்ஸிட் – பிரிட்னின் இறுதி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல்


ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான இறுதி ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டுள்ளது.

 

பிரஸல்ஸில் கூடிய ஐரோப்பிய ஒன்றிய 27 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மேற்கொண்ட விவாத கூட்டத்திற்கு பின்னர், இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.  

 

வாக்கெடுப்பு இல்லாமல் எல்லா நாடுகளின் தலைவர்களும் ஒரு மனதாக இதனை ஏற்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆனால், பிரிட்டன் நாடாளுமன்றமும் ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த இறுதி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

டிசம்பர் தொடக்கத்தில் பிரிட்டன் நாடாளுமன்றம் இந்த ஒப்பந்தம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்ததுமென தெரிகிறது.

 

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா என்பது பற்றி 2016ம் ஆண்டு மக்களிடம் கருத்து அறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

 

அதில் பெரும்பான்மையான மக்கள் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

 

அதன் பின்னர் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்ற விவாதங்களுக்கு பின்னர்தான் இந்த இறுதி ஒப்பந்தம் ஒரு வடிவம் பெற்றுள்ளது.

Add new comment

11 + 4 =