பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தம் – பல அமைச்சர்கள் ராஜிநாமா


ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்காக உருவாகியிருக்கும் வரைவு ஒப்பந்தத்துக்கு ஏற்றுகொள்ள போவதில்லை என்று பிரெக்ஸிட் செயலாளர் டொமினிக் ராப் பதவி விலகியுள்ளார்.

 

மேலும், வேலை மற்றும் ஓய்வூதியச் செயலாளர் எஸ்தர் மெக்வே, இளைய பிரெக்ஸிட் அமைச்சர் சூயெல்லா பிரேவர்மேனும் ராஜிநாமா செய்துள்ளார்.

 

பிரிட்டனின் ஆளும் கட்சியில் இத்தகைய குழப்பங்கள் நடைபெறும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே வரைவு ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்தாலும், இறுதித் தீர்வு ஏற்பட இன்னும் அதிக நடைமுறைகள் உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான பேச்சுவார்த்தை பொறுப்பாளர் மைக்கேல் பார்னியர் கூறியுள்ளார்.

 

பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தம் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரிசா மே நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறார்.

 

தெரிசா மே சார்ந்துள்ள ஜனநாயக ஒன்றிய கட்சியின் ஆதரவாளர்களும், பழமைவாத கட்சியை சேர்ந்த பிரெக்ஸிட் ஆதரவாளர்களும் இந்த வரைவறிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர்.

Add new comment

10 + 2 =