பிரிட்னின் பவுண்ட் நோட்டில் அச்சிட இந்திய விஞ்ஞானி பரிந்துரை


பிரிட்னில் அச்சடிக்கப்படவுள்ள 50 பவுண்ட் நோட்டில் இந்திய விஞ்ஞானி ஒருவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.  

 

பிரிட்டனின் அறிவியல் வளர்ச்சிக்கு உதவிய விஞ்ஞானி ஒருவரின் பெயரும், படமும் 50 பவுண்ட் நோட்டில் வெளியிட முடிவாகியுள்ளது.

 

5 மற்றும் 10 பவுண்ட் மதிப்பிலான புதிய நோட்டுகள் சமீபத்தில் பிரிட்டன் வெளியிட்டது. 2020ல் புதிய 20 பவுண்ட் நோட்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.  

 

அதற்கு அடுத்து புதிய வடிவிலான 50 பவுண்ட் நோட்டும் அச்சடிக்கப்படுமாம்.

 

இந்த 50 பவுண்ட் நோட்டில் பிரிட்டன் அறிவியல் வளர்ச்சிக்கு உதவிய விஞ்ஞானியின் பெயரும், படமும் வெளியாகவுள்ளது.  

 

இதற்கு ஒரு லட்சத்து 74 ஆயிரம் பெயர்கள் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

 

இந்த பெயர்களில் பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், வேதியியல் விஞ்ஞானி மார்க்கரெட் தாட்சர், இந்தியாவைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி சர் ஜெகதீஷ் சந்திர போஸ் ஆகியயோரின் பெயர்கள் உள்ளன.

 

பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்றபோது, இந்தியாவில் பல்வேறு அறிவியல் ஆய்வுகளை சந்திர போஸ் மேற்கொண்டார்.

 

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலும், பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர் இவர்.

Add new comment

1 + 3 =