பிரிட்டன் அரசியலில் பரபரப்பு, பிரெக்ஸிட் என்னவாகும்?


பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் தொடர்பாக அந்நாட்டு பிரதமர் தெரசா மே கொண்டு வந்த ஒப்பந்தத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோற்கடித்துள்ளனர்.

 

தெரசா மேயின் கன்சர்வெட்டிவ் கட்சியின் 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

 

இதனால், அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.

 

தெரசா மேயின் ஒப்பந்தத்துக்கு எதிராக 432 வாக்குகளும், ஆதரவாக 202 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

 

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி அடைந்த மோசமான தோல்வியாக இது கருதப்படுகிறது

பிரிட்டன் எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கார்பைன் தெரசா மே அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார்.

 

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எந்த ஒப்பந்தம் அடிப்படையில் பிரிட்டன் விலகும் என்பதில் தெளிவில்லாமல் உள்ளது.

 

இதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுகின்ற முடிவுக்கு ஆதரவாக பிரிட்டனில் 2016-ல் மக்களின் தெரிவித்த முடிவை அமல்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Add new comment

3 + 0 =