பிரான்சிஸில் மஞ்சள் ஜாக்கெட் போராட்டத்தில் வன்முறை


பிரான்சிஸில் நடைபெற்று வரும் மஞ்சள் ஜாக்கெட் போராட்டத்தில், காவல்துறையினரோடு போராட்டக்காரர்கள் மோதியதில் வன்முறை ஏற்பட்டுள்ளது.

 

பிரான்ஸில் எரிபொருள் உயர்வுக்கு எதிராக இந்த போராட்டம்  நடைபெறுகிறது.

 

பிரான்ஸ் குடியரசில் வன்முறையை அனுமதிக்க முடியாது என்று அதிபர் மக்ருங் தெரிவித்துள்ளார்.

 

கண்ணீர் புகை குண்டுகளாலும், தண்ணீர் பீச்சி அடித்தும் காவல்துறை போராட்டத்தை கலைக்க முற்பட்டதால் அந்த இடம் போர்க்களமாகியது.

 

 

டீசல் விலை உயாவால் தொடங்கப்பட்ட இந்த போராட்டத்தில்,  பின்னர் வாழ்க்கை செலவு உயர்வால் பாதிக்கப்பட்டவர்களும் இணைந்ததால் போராட்டம் பெரிதாகியது.

 

தலைநகரில் நடைபெற்ற போராட்டத்தை தவிர பெரும்பாலான போராட்டங்கள் அமைதியாக நடைபெற்றுள்ளன.

Add new comment

2 + 1 =