பிரான்சில் கலவரம் எதிரொலி – எரிபொருள் மீதான அதிக வரிவிதிப்பு தற்காலிகமாக ரத்து


பிரான்ஸ் நாடு புதைபொருள் எரிபொருட்களை நம்பியிருப்பதை குறைத்து, புதுப்பிக்கவல்ல எரிபொருட்களை வளர்த்தெடுக்கும் நோக்கில் பாரம்பரிய புதைபொருள் எரிபொருட்கள் மீது அதிகப்படியான வரி விதித்துள்ளது.

 

இதனை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

 

எரிபொருட்களுக்கான அதிக வரிவிதிப்பு அடுத்த ஆண்டு இன்னும் உயரும் என்றும், மின்கட்டணமும் உயர்த்தப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவித்திருப்பதால், மக்கள் பெருங்கோபம் அடைந்துள்ளனர்.

 

கடந்த 3 வாரங்களாக பிரான்சின் முக்கிய நகரங்களை ஸ்தம்பிக்க செய்யும் அளவுக்கு பேராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 

போராட்டங்களில் காவல்துறையினரோடு மக்கள் மோதியுள்ளனர். வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன. இதுவரை 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

 

எனவே திட்டமிட்டுள்ள எரிபொருள் வரி உயர்வை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை ஒத்தி வைப்பதாக அந்நாட்டு பிரதமர் எடாவ்ர்ட் பிலிப் அறிவித்துள்ளார்.

 

இந்த எரிபொருள் விலை உயர்வுக்காக சமூக ஊடகங்கள் மூலம் வளர்ந்த இயக்கத்தை, தனது சீர்திருத்தங்களை செயல்படுத்த முடியாத அளவில் தவறான திசைக்கு எதிர்க்கட்சிகள் திருப்பிவிட்டுள்ளதாக மக்ரோங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Add new comment

10 + 0 =