பிரான்சில் அவசர நிலை பிரகடணம்?


எரிபொருள் வரி உயர்வுக்கு கண்டணம் பிரான்ஸ் நாட்டில் கலவரம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அவசர நிலையை அறிவிக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. .

 

பிரான்ஸ் நாட்டில் எரிபொருளுக்கான வரி அண்மையில் உயர்த்தப்பட்டது. அதன் விளைவாக அன்றாட தேவைகளுக்கான விலையும் அதின அளவு உயாந்தது.

 

விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்ததோடு, இந்த போராட்டம் கலவரமாக மாறியது.

 

பல இடங்களில் மறியல், வாகனங்களுக்கு தீ வைத்ததல், கட்டங்களை அடித்து நொறுக்குதல், பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் என வன்முறையாகவும் மாறியது.

 

காவல்துறையினருக்கும்,போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்டு மோதல்களை தொடாந்து இந்த போராட்டம் ஒருங்கிணகை்கப்பட்டுள்ளது.

 

கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வருகின்ற மோதல்களால், அவசர நிலை பிரகடனம் செய்ய அதிபர் மங்ரோங் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளிவருகின்றன.

 

 

கலவரத்தால் 133க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Add new comment

3 + 15 =