பிரம்மாண்ட பகவத் கீதை புத்தகம் திறந்து வைப்பு


தலைநகர் டெல்லியில் உள்ள இஸ்கான் கோவிலில் பிரம்மாண்ட பகவத் கீதை புத்தகத்தை இந்திய தலைமையமைச்சர் நரோந்திர மோடி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

 

இந்துக்களின் புனித நூலாக பகவத் கீதை கருதப்படுகிறது.

 

670 பக்கங்கள் கொண்ட இது, 800 கிலோ எடை கொண்டதாகும். 2.8 மீ நீளமும், 2 மீ அகலமும் கொண்டது.

 

18 அற்புதமான ஓவியங்கள் இடம்பெற்றுள்ள இந்தப் புத்தகத்தில் மிகச் சிறப்பான முறையில் இத்தாலி நாட்டின் மிலன் நகரில் அச்சிடப்பட்டது.

 

உலகிலேயே மிகப்பெரிய பகவத் கீதை புத்தகம் என்ற பெருமையை, டெல்லி இஸ்கான் கோவிலில் உள்ள இந்த புத்தகம் பெற்றுள்ளது.

 

இந்து சமயத்தையும், இந்திய மரபுரிமைகளையும் பாதுகாக்க அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்தை ( இதன் ஆங்கில வார்த்தையின் சுருக்கமே “இஸ்கான்”) ஹரே கிருஷ்ணா இயக்கம் என்றும் அழைப்பர்.

 

இந்த அமைப்பு உலகம் முழுவதும் 400 கோவில்களையும், 100 சைவ உணவகங்களையும் கொண்டுள்ளதோடு, ஏராளமான சமூக சேவை திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

Add new comment

2 + 17 =