பிரதமராக செயல்பட தடை – ராஜபக்ச மேல்முறையீடு


இலங்கையில் மஹிந்த ராஜபக்ச பிரதமராக செயல்பட விதிக்கப் பட்ட தடையை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.

 

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா கடந்த அக்டோபர் 26-ம் தேதி நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவுக்கு பதவி ஏற்பு செய்து வைத்தார். .

 

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மேல் முறையீட்டு நீதிமன்றம், ராஜபக்ச பிரதமராக செயல்பட இடைக்கால தடை விதித்தது.

 

இந்த உத்தரவை எதிர்த்து மஹிந்த ராஜபக்ச உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மேல்முறையீடு செய்துள்ளார்

Add new comment

2 + 12 =