பிரச்சனைகளை பார்த்து அஞ்ச வேண்டாம் – திருத்தந்தை


ஏதாவது ஒரு வடிவிலான பிரச்சனை இல்லாமல் வளர்ச்சி இல்லை. போரில்லாமல் வெற்றியில்லை என்று இயேசு சபையினரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

 

வளர்ந்து வரும் மெத்தனம், சுயமாகவே திருப்தி அடைதல், ஆன்மிக வாழ்வில் உலக அபிலாஷைகள் கலப்பது ஆகியவை  நமக்கு மிகவும் மோசமான தீங்ககளாகும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 

1968ம் ஆண்டு மறைந்த இயேசு சபை அருட்தந்தை பெட்ரோ அர்ருபே நிறுவிய காசுவிலுள்ள ரோம் சர்வதேச கல்லூரியின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை சந்தித்தபோது திருத்தந்தை பிரான்சிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

 

கடவுளிடம் இருக்கும் பிணைப்பை பலப்படுத்தி அன்பில் வளர அவர்கள் அழைக்க்ப்பட்டுள்ளதாக அவர்களிடம் திருத்த்நதை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

Add new comment

4 + 4 =