பிஜேபி தேர்தல் அறிக்கைக்கு பரிந்துரைகள் வழங்கிய கிறிஸ்தவர்கள்


2019 மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறுவதற்கு தேவையான பரிந்துரைகளையும், முன்மொழிவுகளையும் கிறிஸ்தவர்கள் சார்பாக இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வழங்கியுள்ளது.

 

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்காக பௌத்தம், கிறி்தவம், ஜெயின் மற்றும் இஸ்லாம் போன்ற சிறுபான்மை மதங்களின் கருத்துக்களை பெறுகின்ற நோக்கத்தோடு கூட்டம் ஒன்று டெல்லியில் நடைபெற்றது.

 

சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தர் அப்பாஸ் நாக்வியின் தலைமையில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் குழுவொன்று கலந்து கொண்டு இந்த பரிந்துரைகளையும், முன்மொழிவுகளையும் வழங்கியுள்ளது.

 

இந்திய கத்தோலிக்க பேரவையின் கல்வி மற்றும் கலாசார செயலர் சலேசிய சபையை அருட்தந்தை ஜோசப் மணிபாடம் தலைமையில் இந்த குழு சென்றுள்ளது.

 

இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் பொதுச் செயலளார் தியோடோர் மஸ்காரன்காஸ் இந்த குழுவில் இடம்பெ்றறிருந்தார்.

 

அருட்தந்தை மணிபாடம் தயாரித்த பரிந்துரைகளை இந்த ஆயர்கள் பிரதிநிதித்துவ குழு இந்த கூட்டத்தில் வழங்கியுள்ளது.

 

சிறுபான்மையினர் அனைவரும் பாதுகாப்பாக உணர்வது, அனைவருக்கும் வேலைவாயப்பு, எல்லா மதங்களையும் மதித்து, போற்றுவது, தேசிய நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகளை எவ்வித தலையீடுகளும் இல்லாமல் செயல்பட செய்தல், கல்வியில் கவனமாக மாற்றங்கள் கொண்டு வருதல் போன்ற பல்வேறு பரிந்துரைகளும், முன்மொழிவுகளும் இதில் வைக்கப்பட்டுள்ளன.

Add new comment

15 + 5 =