பாலகோட் தாக்குதல் எதிரொலி: இந்தியத் திரைப்படங்களுக்கு பாகிஸ்தானில் தடை


இந்தியத் திரைப்படங்கள் பாகிஸ்தானில் திரையிட தடைவிதிக்கப்படுவதாக அந்த நாடு அறிவித்துள்ளது.

 

பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் இந்திய விமானப் படையினர் தாக்குதல் நடத்தி பெரியதொரு தீவிரவாதிகள் முகாமை அழித்துள்ளதற்கு கண்டனம் தெரிவிப்பதற்காக இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை காலையில் நுழைந்த இந்திய விமானப்படை போர் விமானங்கள் அதிரடி தாக்குதலை நடத்தியது.

 

பாகிஸ்தானின் வான்பரப்பில் அத்துமீறி நுழைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் இந்திய பாதுகாப்புப் படைகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 46 படையினர் உயிரிழந்தது இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை 3.30 மணி அளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

 

ஆனால், இது பற்றி தகவல் தெரிவித்த இந்திய தேசிய வெளியுறவு செயலர் விஜய் கோகலே பாலகோட் என்ற இடத்தில் அமைந்திருந்த பெரியதொரு தீவிரவாதிகளின் முகாமை அழித்துவிட்டதாக தெரிவித்தார்.

 

இந்திய விமானப்படை நடத்திய இந்த தாக்குதல் பாகிஸ்தான் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியத் திரைப்படங்களுக்கு பாகிஸ்தான் திரைப்பட விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், இந்தியப் படங்கள் பாகிஸ்தானில் வெளியாகாது என்று பாகிஸ்தானின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் சவுத்ரி ஃபவாத் ஹூசைன் கூறியுள்ளார்.

Add new comment

2 + 1 =