பாரதிய ஜனதா கட்சியில் கௌதம் கம்பீர்


முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் கௌதம் கம்பீர் பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) கட்சியில் இணைந்துள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரான கவுதம் கம்பீர், தோனி தலைமையிலான 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் விளையாடி வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்.

 

பின்னர், ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடிக் கொண்டிருந்த இவர்,  தற்போது பாஜக கட்சியில் சேர்ந்துள்ளார்.

 

டெல்லியை சேர்ந்தவர் என்பதால் மக்களவை தேர்தலில் டெல்லியில் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Add new comment

10 + 9 =