பாபுவா நீயூ கினியில் நாடு இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்
தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் சிலருக்கும் பபுவா நியூ கினி பெண்களுக்கும் பிறந்த 39 குழந்தைகள், நாடில்லாமல் தவிக்கும் நிலையை எதிர்கொள்வதாக பெற்றோர் தெரிவித்திருக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயலும் நூற்றுக்கணக்கான அகதிகள் பசிபிக் தீவு நாடான பப்பு நியூ கினியானவில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டு வருகின்றனர்.
சுமார் 750 அகதிகள் பபுவா நியூ கினியில் உள்ளனர் என்று அகதிகளுக்கான ஐ.நா. ஆணையரின் சமீபத்தில் தெரிவித்தார்.
இப்போது குழந்தைகள் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் புதியது அல்ல.
50 ஆண்டுகளுக்கு முன், மேற்கு பப்புவான் அகதிகளுக்கும் பபுவா நியூ கினி பெண்களுக்கும் பிறந்த குழந்தைகளுக்கு பல ஆண்டுகளுக்கு பின்னர்தான் பிறப்புச் சான்றிதழும் குடியுரிமையும் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அகதிகளின் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள பபுவா நியூ கினி குடிவரவு மற்றும் குடியுரிமை ஆணையத்தின் பேச்சாளர், நாட்டின் அரசியலமைப்புச் சட்டப்படி அகதி தந்தைக்கு பிறந்த குழந்தை இந்நாட்டு குடிமகன் என்று கூறியிருக்கிறார்.
இக்குழந்தைகளுக்கு உடனடியாக பிறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Add new comment