பாபுவா அகதிகளுக்கு உதவுவதற்கு மையம் அமைத்த கிறிஸ்தவ இளைஞர்கள்


இந்தோனீசியாவின் கிழக்க எல்லையில் அமைந்துள்ள பாபுவாவிலுள்ள கிறிஸ்தவ இளைஞர்கள், மோதல்களுக்கு அஞ்சி தப்பியோடியவர்களுக்கு உதவி செய்ய, உதவி மையம் ஒன்றை அமைத்துள்ளனர்.

 

உள்ளூர் காடுகளில் மறைந்து வாழ்க்கை நடத்தி வருகின்ற பாபுவா கிராம மக்கள் ஆயிரம் பேருக்கு உதவுவதற்கு இந்த உதவி மையம் உருவாக்கப்படடுள்ளது.  

 

டிசம்பரில் சிப்பாய்களுக்கும், படையினருக்கும் இடையில் நடைபெற்ற சண்டையில் தொழிலாளர் குழு ஒன்று கொல்லப்பட்ட பின்னர் இந்த மக்கள் காடுகளில் மறைந்து வாழ்ந்து வருகின்றனர்.

 

குறைந்தது 780 குடும்பங்கள் அல்லது ஆயிரத்து 500 பேர் தங்களின் வீடுகளில் இருந்து தப்பியோடி விட்டதாக பாபுவாவிலுள்ள கிறிஸ்தவ தேவாலங்கள் பேரவையின் மேதகு பென்னி கிலே தெரிவிக்கிறார்.

 

சுதந்திர பாபுவா இயக்கத்தின் படைப்பிரிவு உறுப்பினர்களை தேடுவதற்கு நடுகா மாவட்டத்திற்கு ராணுவத்தினர் அனுப்பப்பட்ட பின்னர், தங்களை பாதுகாத்து கொள்ளுவதற்கு இவர்கள் காடுகளில் மறைந்து வாழ்ந்து வருகின்றனர்.

Add new comment

1 + 0 =