பாபுவாவில் கல்வியை வளர்க்க இணையும் நாடும், திருச்சபையும்


பாபுபா உள்பட நாட்டின் பல இடங்களில் கல்வி துறையில் காணப்படும் பிரச்சனைகளை சமாளிக்க கத்தோலிக்க திருச்சபையோடு நெருக்கமாக பணிபுரியும் முக்கியத்துவத்தை இந்தோனீஷிய கல்வி அமைச்சர் முஹாட்ஜிர் இப்ஃபென்டி வலியுறுத்தியிருக்கிறார்.

 

தேசிய கத்தோலிக்க கல்வி குழு கூட்டத்தில் பங்கேற்ற இப்ஃபென்டி பாபுபாவில் சீர்கலைந்து காணப்படும் கல்வி நிலையை மேம்படுத்த கல்வி அமைச்சகம் விரும்புவதாக கூறியுள்ளார்.

 

கல்வியாளர்கள் மற்றும் கத்தோலிக்க திருச்சபையிடம் இருந்து உதவிகள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ஊட்டச்சத்து குறைபாடு மிக பெரிய பிரச்சனையாக இருக்கின்ற பாபுபா பிரதேசத்தில் பள்ளியில் உணவு வழங்குவது உள்பட திருச்சபையின் உயர் தர கல்வி திட்டங்களை அமைச்சர் புகழ்ந்துள்ளார்.

 

பாபுபா போன்று கல்வித்துறையில் அதிக பங்களிப்பை வழங்கி வரும் திருச்சபையோடு இணைந்து பணியாற்றுவோம் என்று இப்ஃபென்டி தெரிவித்திருக்கிறார்.  

Add new comment

2 + 13 =