பாதுகாப்பு மிகுந்த நாட்டில் ஆசியா பீபி அடைக்கலம் பெற முயற்சி


பிரிட்டனின் தொழிற்கட்சி நாடானுமன்ற உறுப்பினரை சந்திப்பதற்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சம்மதித்துள்ளார்.

 

தெய்வ நிந்தனை வழக்கில் மரண தண்டனை பெற்று, 8 ஆண்டுகளுக்கு மேலாக தனிமை சிறையில் வாடிய பின்னர் மேல்முறையீட்டில் மரணதண்டனை ரத்து செய்யப்பட்ட ஆசியா பீபியை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.

 

அவருக்கு அடைக்கலம் கொடுப்பது பற்றி பேசுவதற்காக இந்த சந்திப்பு நடைபெறுவதாக தெரிகிறது.

 

இந்த அடைக்கல கோரிக்கையை அரசு சிரத்தையுடன் கண்நோக்க வேண்டும் என்று பிரிட்டனிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

தனிப்பட்ட விடயங்கள் பற்றி தன்னால் எதுவும் கூற முடியாது என்று கூறிய பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சாஜிட் ஜாவிட், ஆசியா பீபியும், அவரது குடும்பமும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய முதன்மை அளிக்க்பபட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

 

அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் வேறு சில நாடுகளையும் தேடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Add new comment

6 + 3 =