பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், மிண்டனாவில் புதிய ஆயர் பொறுப்பேற்பு


மூன்று நாட்களுக்கு முன்னர் சுலு மாகாணத்திலுள்ள பேராலயத்தில் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து ஜனவரி 30ம் தேதி, பலத்த பாதுகாப்புகளு்ககு மத்தியில், பிலிப்பீன்ஸின் தென் பகுதியிலுள்ள கோடாபாடோ உயர் மறைமாவட்டத்தில் புதிய ஆயர் திருபொழிவு பெற்று பொறுப்பேற்றுள்ளார்.

 

தற்போது பொறுப்பேற்றுள்ள அமலோற்பவ மரியன்னை சபையை சேர்ந்த பேராயர், ஏஞ்சலிட்டோ லம்போன் வட்டாரத்தின் முதல்வராக இருந்து வந்தார்.

 

மக்களுக்காக எனது இதயம் இரங்குகிறது. என்னை அவர்களுக்கு 21 ஆண்டுகளாக தெரியும்.அவர்கள் எனது குடும்பமாகியுள்ளனர் என்று இந்த ஆயர் கண்கலங்கியவாறு பேட்டியில் பதிலளித்தார்.

 

ஜோலோ கார்மல் மலை மரியன்னை பேராயலத்தில் நடைபெற்ற இரட்டை குண்டு தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர். 97 பேர் காயமடைந்தனர்.

Add new comment

3 + 9 =