பாஜக தோல்வி - ஜனநாயகத்திற்கு வெற்றி - மம்தா


மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு எதிராகத் தீர்ப்பளித்து இருக்கிறார்கள்,

 

இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

 

பல்வேறு கட்டங்களாக சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற  சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 7-ம் தேதியோடு நிறைவடைந்தது.

 

அவற்றின் வாக்கு எண்ணிக்கையில், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இருந்த நிலையில், ஆட்சியைத் தக்கவைக்க முடியாத நிலையில் பாஜக உள்ளது.

 

சத்தீஸ்கரிலும், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

 

மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

 

மிசோரத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்துள்ளது.

 

தெலங்கானாவில் டிஆர் சந்திரசேகர ராவின் கட்சி 2-வது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது.

 

இவ்வாறு 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

 

அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறம் நபடாளமன்ற  தேர்தலுக்கு அரையிறுதியாகப் பார்க்கப்படும் இந்தத் தேர்தலில் 5 மாநிலங்களிலும் பாஜக இல்லை.

Add new comment

14 + 6 =