பாஜகாவுக்கு பெரும் தோல்வி கிடைக்கும் என கணிப்பு


உத்தர பிரதேசத்தில் பாஜக கூட்டணி 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என சமீபத்திய வெளியான கருத்து கணிப்பில் தெரிய வருகிறது.

 

இந்நிலையில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இனைந்துள்ள மெகா கூட்டணியில் காங்கிரஸும் இணைந்துவிட்டால், பாஜகவுக்கு கணிக்கப்பட்டுள்ளதைவிடட மிக மோசமான தோல்வியை கிடைக்கும் எனவும் தெரிய வந்துள்ளது.

 

மக்களவைத் தேர்தல் தொடர்பாக இந்தியா டுடே கார்வி நிறுவனத்துடன் இணைந்து இந்த கருத்து கணிப்பை நடத்தியது.

 

இந்தியாவிலேயே அதிகமாக 80 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் பெறும் வெற்றியே மத்தியில் ஆட்சியை கைபற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

கடந்த தேர்தலில் பாஜக உ.பி.யில் 80 தொகுதிகளில் 71 தொகுதிகளை கைபற்றி பெரும் வெற்றி பெற்றது

 

அதேசமயம் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தால் பாஜக வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடியும் எனவும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

Add new comment

1 + 2 =