பாஜகாவுக்கு எதிராக மம்தா திடீர் போராட்டம்


எனது வாழ்க்கையைக் கூட இழக்கவும் தயாராக இருக்கிறென். ஆனால், சமரசம் செய்துகொள்ள போவதில்லை என்று பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார்.

 

மேற்கு வங்கத்தில் 'ரோஸ் வேலி', 'சாரதா சிட்பண்ட்ஸ்' ஆகிய இரு நிதி நிறுவனங்களில் நடந்த மோசடி தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரியான ராஜீவ் குமார் விசாரணை நடத்தினார். கொல்கத்தா மாநகர காவல்துறை ஆணையராக அவர் தற்போது வேiலை  செய்து வருகிறார்.

 

நிதி நிறுவன மோசடி வழக்குகளை ராஜீவ் குமார் முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறப்பட்டு, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

 

இந்த வழக்கு சம்மந்தமாக விசாரிப்பதற்கு பலமுறை சிபிஐ சம்மன் அனுப்பியும் ராஜீவ் குமார் ஆஜராகவில்லை.

 

எனவே, அவரை விசாரிக்க இருப்பதாக தகவல் அளித்துவிட்டு, சிபிஐ அதிகாரிகளில் ஒரு பிரிவினர், ராஜீவ் குமார் இல்லத்துக்கு சென்றுள்ளனர்.

 

சிபிஐ அதிகாரிகளை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தவே, முறையான ஆவணங்கள் இருக்கிறதா எனக் கேட்டதில் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

வலுக்கட்டாயமாக சிபிஐ அதிகாரிகளை வாகனத்தில் ஏற்ற கொண்டு, போலீஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.ப்ட்டு காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.

 

சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

 

இந்நிலையில், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்' என்ற முழக்கமிட்டு கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் எதிரில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி முதல்வர் மம்தா பானர்ஜி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் மோசடி வழக்கில் ஈடுபட்டதாகக் பாஜக குற்றஞ்சாட்டியபோது வீதியில் இறங்கி நான் போராடவில்லை.

 

காவல்துறை அமைப்புக்குத் தலைமை வகிக்கும் கொல்கத்தா காவல்துறை ஆணையரை அவமானப்படுத்த முயற்சித்தீர்கள். எனவே, போராட்டத்தில் இறங்கியுள்ளேன்.

 

இதற்கு எனது வாழ்க்கையை இழந்தாலும், சமரசம் செய்ய போவதில்லை என்று மம்தா கூறியுள்ளார்.

Add new comment

3 + 3 =