பாகிஸ்தான் பிடியில் இந்திய விமானி – அந்நாட்டின் இந்திய தூதருக்கு சம்மன்


இந்தியாவுக்கான பாகிஸ்தான் துணை தூதருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.

 

பாகிஸ்தான் தாக்குதலை சமாளிக்க செயல்பட்ட இந்திய விமானி அபிநந்தன் கொண்டு சென்ற விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டு, அவர் பாகிஸ்தானிடம் சிறை வைக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை வந்துள்ளது.

 

இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டியடிக்கும் முயற்சியில் இந்திய போர் விமானங்கள் ஈடுபட்டன.

 

அப்போது நடைபெற்ற சண்டையின்போது பாகிஸ்தான் போர் விமானம் சுட்டதில் இந்தியாவின் மிக் ரக போர் விமானம் பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது.

 

ஒரு விமானத்தை இழந்துள்ளதாக இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. விமானி ஒருவரை பிடித்து வைத்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்திருப்பதாக இந்திய கூறியுள்ளது.

Add new comment

3 + 11 =