பாகிஸ்தான் நாணய மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி


அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு இதுவரை வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது.  

 

பாகிஸ்தானில் புதிய அதிபராக இம்ரான் கான் பதவியேற்ற 100வது நாளை அரசு வியாழக்கிழமை கொண்டாடிய அடுத்த நாள் அதன் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ளது.

 

கடந்த வியாழக்கிழமை டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு ரூ.134 என இருந்தது. வெள்ளிக்கிழமை இது 10 ரூபாய் சரிவடைந்த ரூ.144 என ஆகியது.

 

கடன் சுமையால் தவிக்கும் பாகிஸ்தான் அரசு, சர்வதேச நாணய நிதியத்துடன் ஈது குறித்து பேசவுள்ளது.

Add new comment

5 + 3 =