பாகிஸ்தான் சிறை கைதிகளுக்கு விவிலிய அடிப்படையிலான ஒழுங்குமுறை


பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள 35 சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ சிறை கைதிகளுக்கு விவிலியத்தின் அடிப்படையிலான ஒழுங்குமுறை விரைவில் அமல்படுத்தப்படும் என்று மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சர் இஜாஸ் அலாம் அகஸ்டின் தெரிவித்துள்ளார்.

 

சிறைச்சாலைகளில் மறைக்கல்வி கற்றுக்கொடுக்கப்படும். அதில் பங்கேற்போருக்கு கணிசமான தண்டனை குறைப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

1977ம் ஆண்டு மாகாண சிறைத்துறையால் அனுமதிக்கப்பட்ட ஒழுங்குமுறை இந்த சிறைச்சாலைகளில் அமல்படுத்தப்படவுள்ளது.

 

இந்த செயல்முறையை அமல்படுத்துவதை அரசு ஊழியர்கள் தாமதப்படு்த்தியதாக இந்த அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

இந்த ஒழுங்குமுறை அமல்படுத்தப்பட்டவுடன் முந்தைய சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படும் வழிமுறை தொடங்கும் என்றும் இவர் கூறியுள்ளார்.

 

கல்வி மற்றும் வணிக பட்டங்களை பெறவதும் இந்த திட்டத்தில் உள்ளடக்கியுள்ளது.

Add new comment

1 + 0 =