பாகிஸ்தானுக்கு இனி நிதியுதவி இல்லை – டிரம்ப்


பாகிஸ்தானுக்கு இனி ஒருபோதும் நிதியுதவி அளிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதால், நிதியுதவி வழங்கப்படாது என்று அதிபர் டிரம்ப் உறுதியாக கூறியுள்ளார்.

 

பாகிஸ்தானில் மறைந்து வாழும் பயங்கரவாதிகளையும், பயங்கரவாத அமைப்புகளையும் கடடுப்படுத்தி, ஒழிக்க வேண்டும் என அமெரிக்க பல ஆண்டுகளாக கோரி வருகிறது.

 

 

ஆனால், இதில பாகிஸ்தான் தீவிரம் காட்டவில்லை என்பதால், அதற்கு ஆண்டுதோறும் அமெரிக்கா வழங்கி வந்த உதவியின் ஒரு பகுதியை அமெரிக்கா முன்னதாக நிறுத்தி வைத்தது.

 

பாகிஸ்தானில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற இம்ரான் கானும் இதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை.

 

பயங்கரவாத தடுப்பில் பாகிஸ்தான் உதவவில்லை என்பதால், அந்நாட்டின் ராணுவ நிதியுதவியாக வழங்கப்படும் 12 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க போவதில்லை என்று டிரம்ப் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

 

பயங்கரவாதத்தை ஒழித்துவிடாமல், பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதே இதற்கு காரணம் என்றும் அதிபர் டொனல்டு டிரம்ப் கூறியுள்ளார்.   

Add new comment

2 + 17 =