பழங்குடியின மாணவர்களை காப்பாற்றும் முயற்சியில் கைதான கிறிஸ்தவ ஊழியர்கள்


4 சீர்திருத்த சபை ஊழியாகள், நாடாளுமன்ற பெண் உறுப்பினர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உள்பட 19 பேர் மீது பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் ஆள்கடத்தல் வழக்கு தொடுத்துள்ளனர்.

 

ராணுவ நடவடிக்கைகளுக்கு பயந்து கிராம் ஒன்றில் இருந்து பழங்குடியின குழந்தைகள் தப்பி செல்வதில் இருந்து மீட்பதற்கு எடுத்த முயற்சியால் இவர்கள் மீது வழக்கு தொடுக்க்பபட்டுள்ளது.

 

பெற்றோரின் அனுமதி இல்லாமல் வயதுக்கு வராதோரை கொண்டு சென்றதாக பிலிப்பீன்ஸிலுள்ள கிறிஸ்துவின் ஐக்கிய திருச்சபை ஊழியர்கள் எட்கர் யுகாய், ரயன் மக்பாயோ மற்றும் ஐக்கிய மெத்தோடிஸ்ட் திருச்சபையின் எலியர் ஆர்டஸ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

 

வயதுக்கு வராத 14 பேரை கடத்தியதாக இவர்கள் மீது குற்றசாட்டுகள் உள்ளன.

 

துணை காவல் படையினரால் தடுக்க்பபட்ட இந்த மீட்புதவியாளர்கள், மீட்டு கொண்டு சென்ற குழந்தைகளை பார்த்து இந்த வழக்கு பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்க்படுகிறது.

Add new comment

7 + 9 =