பல ஆண்டுகளுக்கு பின், காஷ்மீர் பனிச்சறுக்கு தளத்திலுள்ள தேவாலயத்தில் திருமணம்


காஷ்மீரிலுள்ள குல்மார்க்கில் பனிச்சறுக்கு தளத்தில் இருக்கின்ற சீர்திருத்தச் சபை தேவாலயம் நீண்ட நாட்களுக்கு பிறகு வியாழக்கிழமை புதிய ஜோடி ஒன்றை திருமண பந்தத்தில் இணைத்து்ளளது.

 

ஆஸ்திரேலிய இணை ஒன்று வியாழக்கிழமை இந்த தேவாலயத்தில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து திருமண பந்தத்தில் இணைந்தது.

 

டிம் ராபர்ட்சனும், கேட் ஹேமில்டனும் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து, காஷ்மீரின் குல்மார்க்-கிலுள்ள புனித மரியன்னை தேவாலயத்தில் திருமணம் செய்துள்ளனர்.

 

கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த கிறிஸ்மஸ் பெருவிழாவின்போதுதான் பார்வையாளர்கள் இங்கு வந்துள்ளனர்.

 

இந்த ஜோடி (பலகை வைத்து) பனிச்சறுக்கு விளையாட விரும்புகிறவர்கள்.

 

எனவே, இந்த பனிச்சறுக்கு விளையாட்டு நடைபெறும் மலைப்பகுதியில்தான் தனது திருணம் நடைபெற வேண்டும் என்று கேட் கூறிவிட்டதாக டிம் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

 

புனித மரியன்னை தேவாலயத்தின் ஊழியர் வினு கவுல், இந்த தம்பதியர் குல்மார்க்கில் திருமணம் செய்ய விரும்புவதாக ஆறு மாதங்களுக்கு முன்னரே செய்தி வந்ததாக தெரிவித்திருக்கிறார்.

 

இந்த திருமணம் காஷ்மீர் பற்றிய நேர்மறையான செய்தியை உலகிற்கு அனுப்பும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

 

இந்த திருணம தம்பதியருக்கு முன்னாள் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Add new comment

1 + 1 =