பலமுறை சாக்கரை சோதனை – மன அழுத்தங்களை அதிகரிக்குமா?


டைப் 2 ரக சர்க்கரை நோய் உள்ளவர்கள் வீட்டில் கருவிகளை வைத்துக் கொண்டு அடிக்கடி ரத்த்தில் சர்க்கரை அளவு சோதனை செய்வது பல்வேறு உளவியல் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று புதியதொரு ஆய்வு தெரிவிக்கிறது.

 

நீரழிவு சோதனையை அடிப்படி மேற்கொள்வது நல்லதா, கூடாததா என்று அமெரிக்காவில் ஆய்வு ஒன்று சமீபத்தில் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

ரத்த்தில் சர்க்கரை அளவை அடிக்கடி சோதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அதுவும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்போது தேவையேயில்லை என்றும் இந்த முடிவுகள் சட்டிக்காடடுகின்றன.

 

ஒவ்வொரு நாளும் ரத்த சோதனை செய்து கொண்டு, அறிவுறுத்தப்பட்ட மருந்துகளுக்கு மேலாக எடுத்து கொண்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அபாயகரமாகக் குறையும் ஆபத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த அமெரிக்க ஆய்வில் சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் டைப் 2 ரக நோயாளிகளை ஆய்வு செய்ததில், சுமார்88 ஆயிரம் நோயாளிகள், அதாவது 23 சதவீத நோயாளிகள் வீட்டிலேயே தங்கள் சர்க்கரை அளவை தேவையில்லாமல் சோதித்துக் கொள்பவர்கள் என தெரிய வருகிறது.

 

இவ்வாறு அடிக்கடி ரத்த பரிசோதனை செய்து கொள்வதால், மன அழுத்தம், கவலைகள், செலவுகள்தான் அதிகரிக்கிறதே தவிர நன்மை எதுவும் ஏற்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Add new comment

4 + 6 =