பரபரப்பான சூழலில் நவம்பர் 5ம் தேதி கூடும் இலங்கை நாடாளுமன்றம்


இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 5 ம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஒரு வாரமாக இலங்கை அரசியலில் பெரும் சவால்களும், எதிர்பாராத திருப்பங்களும் ஏற்பட்டுள்ளன.

 

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்சேவை நாட்டின் பிரதமராக அறிவித்தார் மைத்ரிபால சிறிசேனா அறிவித்தார்.

 

அதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

 

ரணில் விக்ரமசிங்கே தானே பிரதமராக தொடர்வதாக கூறி, இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டுமென கோரினார்.

 

இந்த வேண்டுகோளை நிராகரித்துவிட்டு நாடாளுமன்றம் முடக்கினார் சிறிசேனா.

 

இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 16ம் தேதி மீண்டும் திறக்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இப்போது நவம்பர் 5ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 5 ல் திறக்கப்படுகிறது

 

பல்வேறு நாடுகளின் தலைவர்களும், இலங்கை நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் சபா நாயகர் கரு ஜெயசூர்யாவும் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டுமென சிறிசேனாவை வலியுறுத்தி வந்தனர்.

 

நவம்பர் 5ம் தேதி கூடும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில், எந்த பிரதமர் பெரும்பான்மையை நிரூபிப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.

Add new comment

3 + 5 =