பத்ம பூஷன் விருதை திருப்பி அளிக்கப்போவதாக அன்னா ஹசாரே அறிவிப்பு


இந்தியாவை ஆளுகின்ற நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் அரசு, தனக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதுகளை திருப்பி கொடுக்க போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார்.

 

லோக்பால், லோக் ஆயுக்தா சட்டங்களை அமல்படுத்த கோரி 5 நாட்களாக அன்னா ஹசாரே போராட்டம் நடத்தி வருகிறார்.

 

சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலம் ராலேகான் சித்தியில் போராட்டம் நடத்தி வரும் அவர், இன்னும் சில நாட்களில் இந்த அரசு நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் எனக்கு கொடுத்த பத்ம பூஷன் விருதை திருப்பி அளிதது விடுவேன்.

 

மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து வருகின்றனர்.

 

இந்திய கடியரசு தலைவரிடம் தனது விருதை திருப்பி அளிக்க இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

 

சமூகத்திற்காகவும், நாட்டிற்காகவும் சேவையாற்றியதாக எனக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.

 

நாடும் சமூகமும் இதே நிலையில் இருக்குமேயானால் நான் இந்த விருதை வைத்திருக்கபோவதில்லை என்று அன்னா ஹசாரே தெரிவித்திருக்கிறார்.

Add new comment

5 + 7 =