பத்திரிகையாளர் கொலை – சௌதிக்கு ஆயுத விற்பனை நிறுத்திய 2ம் நாடு


பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொலை வழக்கை கருத்தில் கொண்டு சௌதிக்கு ஆயுத ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்துவதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.

 

சௌதி அரேபிய நாட்டு பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சௌதி துணை தூதரகத்தில் வைத்து கொல்லப்பட்டார்.

 

ஜமால் கொலையில் இளிமேல் வருகின்ற முன்னேற்றங்கள் பார்த்து இந்த முடிவு திரும்ப பெறப்படலாம் என்று தெரிகிறது.

 

கடந்த அக்டோபர் 2ம் தேதி சௌதி துணை தூதரகம் சென்ற பின்னர் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி காணாமல் போய்விட்டார்.

 

சௌதி தூதரகத்தில் வைத்து அவர் கொலை செய்யப்பட்டார் என்று துருக்கி குற்றஞ்சாட்ட, சௌதி அதனை மறுத்து வந்தது.

 

ஆனால், துருக்கி ஒலி மற்றும் ஒளிப்பதிவுகளை சான்றுகளாக வெளியிட்ட பின்னர், கசோஜி கொல்லப்பட்டதை சௌதி உறதி செய்தது.

 

ஆனால், கூலிப்படையினரோடு நடைபெற்ற சண்டையில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்து்ள்ளது.

 

சௌதி அரேபியாவுக்கு ஆயுதம் ஏற்றுமதி நிறுத்தப்படும் என்று ஜெர்மனி கடந்த வாரம் அறிவித்தது.

 

இப்போது சுவிட்சர்லாந்து சௌதிக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துவதாக கூறியுள்ளது.

 

ஜமால் கசோஜியின் மரணம் தொடர்பாக, பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் சௌதி அரேபியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தன.

 

 

அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சௌதி அரசை விமர்சித்தும், குறிப்பாக அதன் அடுத்த மணிமுடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் ஜமால் கசோஜி கட்டுரைகள் எழுதி வந்தது குறிப்பிடத்தக்கது.

 

பத்திரிகையாளர் ஜமால் சகோஜி கொலை விவகாரம் சௌதி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

 

சௌதியில் செய்யப்படும் பெரும் முதலீடு மாநாட்டில் உலக நாடுகளின் பல வர்த்தக தலைவர்கள் பற்கேறகவில்லை என்பதும் நினைவுகூரத்தக்கது.

Add new comment

1 + 0 =