பண்டமாற்று முறையில் வெனிசுவேலாவின் எண்ணெய் – இந்தியாவுக்கு எச்சரிக்கை


பண்டமாற்று முறை பரிமாற்றத்தில் வெனிசுவேலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை இந்தியாவை மறைமுகமாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

 

பெரும் பொருளாதார நெருக்கடியிலும், அரசியல் நெருக்கடியிலும் வெனிசுவேலா தவித்து வருகிறது.  

 

இந்த பின்னணியில், வெனிசுவேலா மீது அமெரிக்கா கடந்த மாதம் புதிய பொருளாதார தடைகளை விதித்தது.

 

இதனால், வெனிசுவேலா மேலும் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளது.

 

ஐரோப்பிய நாடுகளும் தடை விதித்துள்ளதால், கச்சா எண்ணெய் வர்த்தகத்தை சரிசெய்ய வெனிசுவேலா சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

இந்தியாவுக்கு கூடுதலாக கச்சா எண்ணெய் விற்பனை செய்ய அந்நாட்டு எண்ணெய் நிறுவனம் திட்டமிடுகிறது.

 

அமெரிக்கா தடுத்திருந்தாலும், பண்டமாற்று முறையில் ஈரானிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கி வருகிறது.

 

கச்சா எண்ணெய் வாங்கும் தொகையில் பாதியை பொருட்களாகவும், மீதி தொகையை ரூபாயிலும் இந்தியா செலுத்தி வருகிறது.

 

இதேபோல இந்தியாவிடம் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய வெனிசுவேலா முயல்கிறது.

 

வெனிசுவேலாவின் இத்திட்டத்துக்கு அமெரிக்கா தடையாக உள்ளது.

 

வெனிசுவேலாவின் கச்சா எண்ணெயை எடுத்து விற்பனை செய்ய மதுரோ அரசுக்கு அதிகாரம் இல்லை.

விற்பனை செய்தால் ஒரு திருட்டு. திருடுபவர்களுக்கு சரியான தண்டனை பெற்று தருவதோடு, திருடும் நபர்களுடன் கைகோர்க்கும் நாடுகளுக்கும் தக்க பதிலடி வழங்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.

Add new comment

3 + 0 =