பட்டேலுக்கு 182 மீட்டர் உயர சிலை – திறந்து வைத்தார் மோடி


இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலின்  உலகின் உயரமான சிலை புதன்கிழமை தலைமையமைச்சர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.

 

குஜராத்தின் சர்தார் சரோவர் அணைக்கு அருகில்  நிறுவப்பட்டுள்ள 182 மீட்டர் உயரமான இந்த சிலை 'ஒற்றுமைக்கான சிலை' என்று அழைக்கப்படுகிறது.

 

உலகின் மிக உயரமான இந்த சிலை 3000கோடி செலவில் கட்டமைக்கப்பட்டது.

 

வேற்றுமைகள் நிறைந்த இந்திய நாடு ஒற்றுமையாக இருக்க இயலாது என பலர் கருதியதாகவும், சர்தார் வல்லபாய் பட்டேல் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வழியை காட்டியவர் என்றும் மோடி தெரிவித்தார்.

 

இந்த சிலை நிறுவப்பட்டதற்கு எதிராக அந்த பகுதி பழங்குடி மக்கள் பலர் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

 

அவர்களில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

Add new comment

6 + 0 =