பட்ஜெட் அரசியல் சாசனத்திற்கு எதிரான தந்திர தேர்தல் அறிக்கை – மு.க.ஸ்டாலின்


வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2019 இடைக்கால பட்ஜெட், இந்திய மக்களுக்கு ஆசை வார்த்தை காட்டி திசை திருப்பும் மலிவான தந்திரமான தேர்தல் அறிக்கை என திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

 

தாக்கல் செய்யப்பட்ட 2019-20ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் செய்யப்பட்டன.

 

அதில் குறிப்பாக, விவசாயிகள் நலன் கருதியும், நடுத்தர குடும்பத்தினரின் நன்மைக்காவும் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றன.

 

இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022ல் புதிய இந்தியா, 2030-குள் பத்து தொலைநோக்கு திட்டங்கள் என அனைவரையும் கவருகின்ற  அறிவிப்புகளால் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரான இடைக்கால நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

சில அறிவிப்புகள்  அரசியல் உள்நோக்கம் நிறைந்த அறிவிப்புகளாகவே அமைந்துள்ளன என்று தெரிவித்திருக்கிறார்.

 

இரு ஹெக்டேர் நிலத்திற்குக் குறைவாக உள்ள விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் நிதியுதவி, ஐந்து லட்சம் ரூபாய் வரை தனி நபர் வருமானத்திற்கு வருமான வரி கட்ட வேண்டியதில்லை என்ற இரட்டை அறிவிப்புகள் வெளிப்படையாக வரவேற்புக்குரியவை போல் இருக்கின்றன.

 

ஆனால், அறிவிக்கப்பட்ட நேரம், அறிவிக்கப்பட்ட தொகை, அதை வழங்கும் நேரம் எல்லாம் விலகிச் சென்று விட்ட விவசாய வாக்காளர்களில் ஒரு சிறு பகுதியினரை இதன் மூலமாவது கவர்ந்திழுத்து வாக்கு வங்கியாக மாற்ற கனவுலகில் மத்திய பா.ஜ.க. அரசு பயணிப்பது புரிகிறது என்று அவர் தெரிவித்திருக்கிறார். .

Add new comment

15 + 0 =